ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி
பதிவு : ஆகஸ்ட் 26, 2019, 10:23 AM
இங்கிலாந்தில் நடைபெற்ற 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து ஹெட்டிங்லியில் ஆஷஸ் தொடரின் 3வது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் எடுத்தது. இதன் பின் விளையாடிய இங்கிலாந்து 67 ரன்களில் சுருண்டது. 112 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெற்றி இலக்காக 359 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், டென்லி, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸின் அபாரமான ஆட்டத்தால், இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமனில் உள்ளது.   

பிற செய்திகள்

"விளையாட்டு அரங்கில் பெண்களுக்கு அனுமதிக்க வேண்டும்" - ஈரான் அரசுக்கு கால்பந்து சங்க தலைவர் கோரிக்கை

கால்பந்து அரங்கில் பெண்களை அனுமதிக்குமாறு ஈரான் அரசை சர்வதேச கால்பந்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

5 views

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்-நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்-நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

9 views

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

பி.சி.சி.ஐ.யின் புதிய சட்ட விதிமுறைகளை ஏற்காமல் இருந்த காரணத்தால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

48 views

கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.சிவந்தி ஆதித்தன்

கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் வலியுறுத்தி உள்ளார்.

9 views

2022 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி - அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு

2022 ஆண்டு சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.