மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் : 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் : 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
x
செயிண்ட் அண்டிகுவா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 222 ரன்களும் எடுத்தது. 75 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே சதம் விளாசினார். இளம் வீரர் விஹாரி 93 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்ஸ்மேன்கள், இந்திய வீரர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 37 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. இறுதியில் கேமர் ரோச் 38 ருன்கள் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி 100 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இந்திய வீரர் பும்ரா 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்