முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து - கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இறுதி போட்டி

உலக கோப்பை இறுதி போட்டியில் , சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து கைப்பற்றியது.
முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து - கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இறுதி போட்டி
x
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது . அதிகபட்சமாக ஹென்றி நிக்கோலஸ் 55 ரன்களும், டாம் லதம் 47 ரன்களும் எடுத்தனர். இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 15  ரன்கள் எடுத்ததால் டை ஆனது. இதனையடுத்து, நியூசிலாந்து அணியைவிட பவுண்டரிகள் அதிகம் அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்