பல்கலைக்கழக விளையாட்டு போட்டி : 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்துக்கு தங்கம்

உலக அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்று தடகள வீராங்கனை டூட்டி சந்த் சாதனை படைத்துள்ளார்.
பல்கலைக்கழக விளையாட்டு போட்டி : 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்துக்கு தங்கம்
x
உலக அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்று தடகள வீராங்கனை டூட்டி சந்த் சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் நேப்பில்ஸ் நகரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றிபெற்ற பின், இது குறித்து கருத்து தெரிவித்த டூட்டி சந்த், தன்னை எவ்வளவு பின்னுக்கு தள்ளுகிறார்களோ, அந்த அளவுக்கு முன்னேறுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். டூட்டி சந்த் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தற்போது பதக்கத்தை வென்ற டூட்டி சந்துக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்