இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு

உலக கோப்பை தொடரில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு
x
உலக கோப்பை தொடரில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலக கோப்பை தொடரில் 25 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் நான்கு ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கீடு இருந்ததால் இந்தியா அணி முழுமையான வெற்றியை பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி, போட்டி நடைபெற உள்ள சவுத்தாம்ப்டனில் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு முன்னர் சவுத்தாம்ப்டனில் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்