கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : அர்ஜென்டினா - பராகுவே ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா பராகுவே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : அர்ஜென்டினா - பராகுவே ஆட்டம் டிரா
x
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா பராகுவே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் பராகுவே அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய நிலையில், பிற்பாதியில் நட்சத்திர வீரர் மெஸ்சி அடித்த கோலால் ஆட்டம் சமனுக்கு வந்தது. இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள அர்ஜென்டினா அணி 1 தோல்வி, 1 டிராவுடன் பி பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்