கோலி அவுட் சர்ச்சை : விளக்கிய தோனி

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் முக்கிய தருணத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோலி அவுட் சர்ச்சை : விளக்கிய தோனி
x
போட்டியின் முக்கிய தருணத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. விராட் கோலி 77 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அமிர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் ரீப்ளேயில் பார்க்கும் போது பந்து பேட்டில் படாமல் சென்றது தெரியவந்தது.
பெவிலியன் திரும்பிய கோலியிடம் அவரது பேட்டை வாங்கி தோனி சோதனை செய்தார். பேட்டின் ஹேண்டில் க்ரிப்யின்றி இருப்பதால் சத்தம் வந்திருக்கலாம் என தோனி கோலியிடம் விளக்கினார்.
இதை உணர்ந்த கோலி கோபத்தில் பேட்டை தரையில் போட்டு உடைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்