ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் : மேற்கு இந்திய தீவுகள் அணி அபார வெற்றி
பதிவு : மே 31, 2019, 11:08 PM
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வீழ்ந்துள்ளது
டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. இதையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் அணியின் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பியதால் அந்த அணி, 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில், ஓசேன் தாமஸ் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியினர் அதிரடியாக ஆடி, 13 ஓவர்களில் இலக்கை எட்டினர். மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்கார‌ர் கிறிஸ் கெயில் அரைசதம் கடந்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓசேன் தாமஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

தோனி மீது முழு நம்பிக்கை வைத்திருந்த ரசிகர் : தோனி ஆட்டமிழந்தவுடன் அதிர்ச்சியில் மரணம்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை பார்த்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

877 views

அரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி

உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது .

70 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தானிடம் வீழ்ந்தது, ஆப்கானிஸ்தான்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

62 views

பிற செய்திகள்

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

138 views

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

439 views

இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,

33 views

சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

19 views

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

9 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.