"உலக கோப்பை தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்" - இன்சமாம் உல்-ஹக் நம்பிக்கை
பதிவு : மே 27, 2019, 05:41 PM
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் என அந்நாட்டு தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல்ஹக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ள இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் மட்டுமின்றி அனைத்து ஆட்டங்களும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் முறியடித்து தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் அரை இறுதிக்கு இந்தியா,பாகிஸ்தான்,நியூசிலாந்து,இங்கிலாந்து அணிகள் முன்னேறும் என கூறினார்.உலக கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் மோதிய 6 ஆட்டங்களில் இதுவரை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.