உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'ஸ்டான்ட் பை' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகி, லோரின் பாடியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டாப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்