தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி : சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு அணி

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தன.
தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி : சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு அணி
x
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தன. சென்னை, பெங்களூர், ஆந்திரா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், பெங்களூரு அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் வீரர்கள் ஸ்ரீகாந்த், புனித் மற்றும் குமார் மூன்று கோல்கள் அடித்தனர். இதன்மூலம் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Next Story

மேலும் செய்திகள்