2019 தேர்தல் களத்தில் நிற்கும் விளையாட்டு வீரர்கள்

2019 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விளையாட்டு துறையில் ஜொலித்த வீரர்கள் யார் யார் தேர்தலில் களம் காணுகின்றனர் என்பது குறித்து தற்போது காணலாம்.
x

2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் ராஜ்யவர்த்தன்  ரத்தோர், தற்போது மீண்டும் பா.ஜ.க. சார்பாக ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தற்போது மத்திய விளையாட்டு துறை அமைச்சராக பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ப்பூர் தொகுதியில் ராஜ்யவர்த்தன் ரத்தோரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக வட்டு எறிதல் வீராங்கனையான கிருஷ்ணா பூனியா களம் காணுகிறார். 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இவர் வட்டு எறிதலில் இந்தியா சார்பாக ஜொலித்த வீராங்கனை இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சாங் பூட்டியா தற்போது தனிக்கட்சி தொடங்கி கடந்த11ஆம் தேதி நடந்து முடிந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக பாய்ச்சாங் பூட்டியா போட்டியிட்டு தோல்வியை தழுவினார். முன்னாள் கிரிக்கெட் வீரரான கீர்த்தி ஆசாத் தற்போது பா.ஜ.க.விலிருந்து பிரிந்து காங்கிரசில் இணைந்துள்ளார். மேலும்  ஜார்க்கண்ட் மாநிலம் தன்பந்த் தொகுதியில் தேர்தலை சந்திக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் பிரசான் பானர்ஜி திரினாமுல் காங்கிரஸ் சார்பாக ஹவ்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் பா.ஜ.க. வில் இணைந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லியில் அக்கட்சி சார்பாக போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 உலகக் கோப்பைகளை வென்ற அணியில் இருந்தவர் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்த வீரர் என்ற பல சாதனைகளை படைத்த கம்பீர் அரசியலிலும் ஜொலிப்பாரா என்பதை தேர்தல் முடிவுகள் தான் தெளிவு படுத்தும். 

Next Story

மேலும் செய்திகள்