கொல்கத்தா Vs பஞ்சாப் இன்று மோதல்

ஐ.பி.எல். தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா  Vs பஞ்சாப் இன்று மோதல்
x
ஐ.பி.எல். தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை வழிநடத்துகிறார். ஆனால் முதல் ஆட்டத்தில் 2 ரன்களில் அவர் ஆட்டமிழந்ததால், தனது திறமையை நிருபிக்கும் உத்வேகத்துடன் அவர் உள்ளார். இதே போன்று அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்டிரு ரஸில், கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக உள்ளார். பஞ்சாப் அணியை பொறுத்தவரை, கிறிஸ் கெயிலின் அதிரடியை நம்பியே உள்ளது. அவர் நல்ல பார்மில் இருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. மான்கட் சர்ச்சையில் சிக்கி விமர்சனங்களை பெற்றுள்ள அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் எப்படி செயல்படப்போகிறார் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இவ்விரு அணிகளும் 23 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 15 முறையும், பஞ்சாப் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 



Next Story

மேலும் செய்திகள்