தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி த்ரில் வெற்றி
பதிவு : பிப்ரவரி 17, 2019, 04:32 AM
இலங்கை அணி த்ரில் வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்சில் 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. 9 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் என்று பரிதாபமான நிலையில் இலங்கை அணி இருந்தது. இருப்பினும் கடைசி விக்கெட்டுக்கு குசேல் பெரேரா, விஸ்வா ஜோடி பொறுப்புடன் விளையாடி இலங்கை அணிக்கு திரில் வெற்றியை பெற்று தந்தது. இலங்கை அணியின் குசேல் பெரேரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 153 ரன்கள் விளாசினார். தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியில் இலங்கை பெறும் 2வது வெற்றி இதுவாகும்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.