அரைமணி நேரம் தொடர்ச்சியாக கரலாக்கட்டை சுற்றி சாதனை
பதிவு : டிசம்பர் 13, 2018, 06:13 AM
கரலாக்கட்டை சுற்றுவதில் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உலக சாதனை செய்துள்ளனர்.
பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் சிலம்பம் குருகுலத்தில் 
உலக சாதனை முயற்சிக்கு திட்டமிட்டு 3 மாதங்கள் தொடர் பயிற்சி எடுத்து வந்தனர். தனியார் பயிற்சி மையத்தின் நிறுவனர் செந்தில் கண்ணன், 12 கிலோ எடையுள்ள ஐந்தடி உயரம் கொண்ட மாஞ்சா கரலாக்கட்டையின் மூலம் 17 நிமிடம் 33 வினாடிகளில் 603 முறை சுற்றி உலக சாதனை படைத்தார். இதேபோல் குருகுலத்தில் பயின்ற வரும் மாணவி வித்யா, கதாயுத சுற்று மூலம் அரைமணி நேரத்தில் 925 முறை சுற்றி செய்து உலக சாதனை படைத்தார். குருகுல மாணவர் பார்த்திபன், மேல் வராக சுற்று பிரிவில் அரைமணிநேரத்தில் ஆயிரத்து 73 சுற்று சுற்றி உலக சாதனை படைத்தார். இந்த சாதனைகளை அசிஸ்ட்   வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட் பதிவு செய்து சான்றிதழ் வழங்கினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.