இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : 4 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : 4 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
x
* பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வல் 46 ரன்களும்,  கிறிஸ் லீன் 37 ரன்களும் எடுத்தனர். இதனால் 17 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டு இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

* 17 ஓவரில் 174 ரன்களை எடுக்க வேண்டும் என்று இலக்கு இந்திய அணிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, தவான் 76 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சரிவிலிருந்த இந்திய அணியை தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடி மீட்டது. இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது


Next Story

மேலும் செய்திகள்