பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் - நியூசிலாந்து அணி திரில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் - நியூசிலாந்து அணி திரில் வெற்றி
x
அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 153 ரன்களும், பாகிஸ்தான் அணி 227 ரன்களும் சேர்த்தது. 74 ரன்கள் பின்தங்கிய நியூசிலாந்து அணி, 2வது இன்னிங்சில் 249 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வெற்றியை நோக்கி சென்ற நிலையில், நியூசிலாந்து வீரர் அஜேஸ் பட்டேலின் சுழலில் சிக்கி 171 ரன்களில் அந்த அணி சுருண்டது.,4 ரன்கள் எடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜேஸ் பட்டேல், அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 


Next Story

மேலும் செய்திகள்