பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இன்று துவங்கவுள்ள பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
x
* பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்கி வருகிற 24ம் தேதி வரை நடக்கிறது. 

* 10 அணிகள் இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.  

* இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு புரோவிடென்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி 11ம் தேதி நடைபெற உள்ளது. 

* நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்