ஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை
பதிவு : அக்டோபர் 20, 2018, 10:18 AM
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், ரஸில் ஆகியோர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், அதிரடி வீரர் EWAN LEWIS ம் சொந்த காரணங்களை காட்டி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

இந்திய அணியை பொறுத்தவரை தவான், ரோஹித், கோலி, தோனி என பேட்டிங் வரிசை வலுவாக காணப்படுகிறது. இளம் வீரர் ரிஷப் பந்த் எவ்வாறு செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் ஒரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி, இளம் வீரர் கலீல் அகமது ஆகியோரை நம்பியே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு உள்ளது.  ஒருநாள் தொடரிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன

95 views

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

41 views

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1149 views

பிற செய்திகள்

போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு

பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.

326 views

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

148 views

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

134 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

74 views

3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்

67 views

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.