ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது உண்மை தான் - பாக்.வீரர் கனேரியா

ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது உண்மை தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டெனிஷ் கனேரியா (DANESH KANERIA) ஓப்புக் கொண்டுள்ளார்.
ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது உண்மை தான் - பாக்.வீரர் கனேரியா
x
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கவுண்டி கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஓவரில் 12  ரன் விட்டுத்தர  WESTFIELD என்ற வீரர், சூதாட்டத் தரகருடன் விலை பேசியதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சிக்கி WESTFIELD சிறை சென்றார். ஆனால், இந்த விவகாரத்திற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று கடந்த 6 ஆண்டாக கூறி வந்த கனேரியா, தற்போது முதல் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பொய்யை கூறிவிட்டு நிம்மிதியாக வாழ முடியவில்லை என்று தெரிவித்துள்ள கனேரியா தம் தந்தை உடல்நலம் சரியில்லாததால் இத்தனை காலம் பொய் கூறிவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்