மே. இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் : அறிமுக போட்டியில் சதம் விளாசிய பிரித்திவி ஷா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய 18 வயதே ஆன இந்திய வீரர் பிரித்திவி ஷா சதம் விளாசி சாதனை படைத்தார்.
மே. இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் : அறிமுக போட்டியில் சதம் விளாசிய பிரித்திவி ஷா
x
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல். ராகுல் டக்-அவுட் ஆனார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சச்சினுக்கு பிறகு சதம் விளாசிய இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பிரித்திவி ஷா பெற்றார். 

மேலும் ரஞ்சி கோப்பை துலிப் கோப்பை சர்வதே டெஸ்ட் என களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பிரித்திவி ஷா 134 ரன்களுக்கும் புஜாரா 86 ரன்களுக்கும் ஆட்டமிழக்க கேப்டன் கோலி அரைசதம் கடந்தார். ரஹானே 41 ரன்களில் வெளியேற ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72 ரன்களுடனும் ரிஷப் பந்த் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்