ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று : இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று : இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
x
லீக் சுற்றில் ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் மோதிய போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கோலி இல்லாத இந்திய அணியிடம் தோல்வி அடைந்த  பாகிஸ்தான் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இதனால், பதிலடி தரும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. 

சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தியது. ஆனால் பாகிஸ்தான் அணியோ ஆப்கானிஸ்தானிடம் போரடி வென்றது. ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இடம்பெற்றுள்ள ஜடேஜாவும் நல்ல பார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும். 

Next Story

மேலும் செய்திகள்