ரகுமான் இசையில் தொடங்குகிறது உலக கோப்பை ஹாக்கி தொடர்..!

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரகுமான் இசையில் தொடங்குகிறது உலக கோப்பை ஹாக்கி தொடர்..!
x
14 வது உலக கோப்பை ஹாக்கி தொடர் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி ஒடிசாவில் தொடங்குகிறது. இந்தியா உள்பட 16 நாடுகளை சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கின்றன. தொடருக்கான தொடக்க பாடலை பாடலாசிரியர் குல்தீப் வரிகளில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக், தொடக்க விழாவில், ரகுமான் நேரலையில் பாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்