தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்..!

ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர் ஒருவர் மைதானத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்..!
x
2 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு தோனி திரும்பினார். இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தோனி ரசிகர்கள் காத்திருந்தனர். அதுவும் ஹாங்காங்க்கு எதிரான போட்டி என்பதால் தோனி, தும்சம் செய்யப்போகிறார் என்று எதிர்பார்ப்பும் நிலவியது. காரணம் 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் ஹாங்காங்க்கு எதிராக சதம் விளாசி இருந்தார் தோனி. ஆனால் நேற்று தோனி டக் அவுட் ஆனார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத சிறுவன் ஒருவர் மைதானத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தோனி டக் அவுட் ஆனதை தாங்கி கொள்ள முடியாத அந்த சிறுவன், அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தார். அந்த சிறுவனின் செயல்பாடு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்