இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல் யாருக்கு சாதகம்..?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல் யாருக்கு சாதகம்..?
x
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இரண்டு அணிகளும் ஏறக்குறைய சம பலத்துடன் இருப்பதால் களத்தில் இன்று அனல் பறக்கும்  என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஹாங்காங் போட்டிக்கு பிறகு ஓய்வின்றி மறுநாளே இந்தியா விளையாடுவது, பாதகமான அம்சமாக கருதப்படுகிறது. 

தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 116 ரன்களில் சுருட்டிய பாகிஸ்தான் அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவுடன் சீறுவதற்கு காத்திருக்கிறது. அந்த அணிக்கு 2 நாட்கள் ஓய்வு கிடைத்ததால் புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்தித்த பாகிஸ்தான் அணி அதில் 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள்  கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காணுகிறது. 

நேற்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஜொலித்த நிலையில் இன்றும் அவரது அதிரடி தொடரும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.



மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், நடுவரிசை வீரரான தோனியும் அதிரடியாக விளையாடினால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் இதுவரை ..! 

ஆசிய போட்டியில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா, 6 முறையும்,  பாகிஸ்தான் 5 முறையும் வென்றுள்ளது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 



இதுவரை நடந்துள்ள ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதனால் இன்றைய போட்டியில் அவர் பந்துவீச்சில் விறுவிறுப்பு நிறைந்ததாகவே இருக்கும். 




நட்சத்திர ஆட்டக்காரர்கள் இந்திய அணி : ரோகித் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், டோனி, புவனேஷ்வர்குமார்

நட்சத்திர ஆட்டக்காரர்கள் பாகிஸ்தான் அணி : முகமது அமிர், உஸ்மான்கான், சோயிப் மாலிக், இமாம் உல்-ஹக்


இன்றைய போட்டியில் விளையாடும் வீரர்களின் விவரம் : 

இந்தியா : ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் / மனிஷ் பாண்டே, டோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகுர் / பும்ரா, கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

பாகிஸ்தான் : இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, ஷதப் கான், பஹீன் அஷ்ரப் / ஜூனைத் கான், முகமது அமிர், ஹசன் அலி, உஸ்மான் கான்.




Next Story

மேலும் செய்திகள்