தடைகளை தகர்த்து எறிந்த செரினா வில்லியம்ஸ்

பிரசவத்திற்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 10 வது முறையாக களமிறங்கி ஆச்சரியப்படுத்திய செரினா வில்லியம்ஸ்.
தடைகளை தகர்த்து எறிந்த செரினா வில்லியம்ஸ்
x
நம் ஊரில் பெண்கள் சிசுவை சுமந்து இருந்தால், பெரியவர்கள் அந்தப் பெண்களுக்கு வேகமாக நடக்கக் கூடாது, சுமைகளை தூக்கக் கூடாது என விதிக்கும் கட்டுபாடுகளோ ஏராளம். ஆனால், சிசுவை 7 வாரங்கள் சுமந்தவாறே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், செரினா வில்லியம்ஸ்.

இந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் வாழ்க்கை முறை, உடல் தோற்றம் என அனைத்தும் மாறிவிடும் என்று கூறுவர். அவ்வளவு ஏன் பிரசவத்திற்கு பிறகு எதும் சாதிக்க முடியாது என சினிமா நடிகைகள், நடிப்பதிலிருந்து ஒதுங்குவதும் உண்டு. வீட்டில் குழந்தையை பார்க்க வேண்டும் என வேலையை விட்ட பெண்களும் இங்கு உண்டு. 

கனவுகளை அடைய பிரசவத்திற்கு பின் உடல் ஒத்துழைக்கவில்லை என்ற கூறும் பெண்களுக்கு இடையே, பிரசவம் என்பது நம்மை முடக்கிவிடக் கூடாது என்று எண்ணி, அதற்கு தடையாக இருந்த தடைகள் அனைத்தையும் முறியடித்து, தாய்மைக்கு பிறகும் கனவை அடைய முடியும் என்று அனைவருக்கும் உணர்த்தி உள்ளார் செரினா. 36 வயதில், குழந்தையை ஈன்று, கடும் உடற்பயிற்சியால் முழு உடல் தகுதியை அடைந்து திரும்பிய இவருக்கு, இந்த ஆண்டின் தொடக்கம் சற்று ஏமாற்றம் தான். 

இவரால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் என இரு தொடரிலும் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் செரினாவின் டென்னிஸ் வாழ்க்கை முடிந்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்தன. இவை அனைத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  விம்பிள்டனின் இறுதிப் போட்டிக்கு 10 வது முறையாக களமிறங்கினார், செரினா.

இறுதிப் போட்டியில் வீழ்ந்தாலும், தனது சாதனைகளால் ரசிகர்கள் மனதில் என்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார், இந்த விளையாட்டு மங்கை.


Next Story

மேலும் செய்திகள்