இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் தோனி : 37வது வயதில் அடியெடுத்து வைக்கும் அதிரடி நாயகன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 37வது பிறந்தநாள்
இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் தோனி : 37வது வயதில் அடியெடுத்து வைக்கும் அதிரடி நாயகன்
x
* இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று  37வது பிறந்தநாள். 

அவரது சாதனை பயணம்...

* 1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி ராஞ்சியில் மகேந்திர சிங் தோனி பிறந்தார். 

* கால்பந்து கோல் கீப்பராக தனது விளையாட்டு வாழ்க்கையை தொடங்கிய தோனி, ஆசிரியரின் வலியுறுத்தலால், கிரிக்கெட் அணியில் சேர்ந்தார். 

* அதிரடி வீரராக வலம் வந்த தோனி, குடும்ப சூழ்நிலை காரணமாக ரயில்வே டிக்கெட் பரிசோதனையாளராக பணி புரிந்தார். 

* வாழ்க்கையில் எத்தனை தடை கற்கள் வந்தாலும், விடா முயற்சியால் அதனை படி கற்களாக மாற்றிய தோனி, 2004 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் களமிறங்கினார்.

* முதல் போட்டியில்  ரன் ஏதும் அடிக்காத நிலையில் ரன் அவுட்டாகினார் தோனி. ஆரம்ப காலத்தில் சோபிக்கத் தவறிய தோனி, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது அதிரடி விளையாட்டை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி சதம் விளாசினார். 

* இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 183 ரன்கள் தோனி விளாச, ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர், 10 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

* 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்ற தோனி, நெருக்கடியான சூழ்நிலைகளை ஆர்க்கபூர்வமாக கையாண்டு உலகக் கோப்பையை வென்று தந்தார்.

* இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி, சர்வதேச தரவரிசையில் நம்பர் 1 அணியாக இந்தியாவை விளங்கச் செய்தார். 

* 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை தோனி பெற்று தந்தார். 

* ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்ற தோனி, தமிழக ரசிகர்களின் அன்பின் பாத்திரமாக விளங்கினார். ஐ.பி.எல். தொடரில் 2 ஆண்டுகள் தடைக்காலத்திற்கு பிறகு சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கினார். வயதான வீரர்களுடைய அணி என்று விமர்சனங்கள் வந்தாலும், அதை காதில் போட்டுக் கொள்ளாத தோனி, ஐ.பி.எல். கோப்பையை 3வது முறையாக வென்று அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தார். 

* ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த  இந்திய கேப்டன், அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பல எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்