உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஸ்பெயின் Vs ரஷ்யா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஸ்பெயின் Vs ரஷ்யா இன்று மோதல்
x
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கும் ரஷ்யா,  பலம் வாய்ந்த ஸ்பெயினை எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணி களமிறங்கிய கடைசி 23 ஆட்டத்தில் தோல்வியை பெறாமல் விளையாடி வருகிறது. ஆனால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி இதுவரை எதிரணிக்கு 5 கோல்களை விட்டு கொடுத்துள்ளது அந்த அணிக்கு குறையாக கருதப்படுகிறது. ரஷ்ய அணி 32 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. லீக் சுற்றில் முதல் 2 வெற்றிகளை பெற்ற ரஷ்ய அணி, மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது, அந்த அணியின் உத்வேகத்தை பாதித்துள்ளது. 

ஸ்பெயின் அணியில் டிகோ கோஸ்டா, ஆண்டிரு இனிஸ்டா உள்ளிட்ட வீரர்கள் அந்த அணியின் பலமாக கருதப்படுகின்றனர். ஆனால் ரஷ்ய அணி டிசியூபாவை (DZYUBA) மட்டுமே நம்பியுள்ளது. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு மட்டுமே ரஷ்யாவின் பலமாக கருதப்படுகிறது. ஸ்பெயின், ரஷ்யா இதுவரை 11 முறை மோதியுள்ளன. இதில் ஸ்பெயின் 6 முறையும், ரஷ்யா ஒரு முறையும் வென்றுள்ளது, 4 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்