டி.என்.பி.எல் தொடரின் 3 வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு

டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3 வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எல் தொடரின் 3 வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு
x
டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3 வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, டி.என்.பி.எல் தொடரின் முதல் போட்டி, ஜீலை 11ஆம் தேதி நெல்லையில் நடக்கிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில், மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடக்கிறது.

நெல்லை மற்றும் திண்டுக்கல் மைதானங்களில், தலா 14 போட்டிகளும், சென்னை சேப்பாக் மைதானத்தில் நான்கு போட்டிகளும் நடைபெற உள்ளன.

கோப்பையை வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. இத்தொடரில் விளையாடும்,  திருவள்ளூர், காரைக்குடி, மதுரை மற்றும் தூத்துக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்