ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

5 நாட்கள் நடைபெற திட்டமிட்ட டெஸ்ட் போட்டி 2 - வது நாளிலேயே முடிவடைந்தது
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி
x
பெங்களூருவில் நடைபெற்ற தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி   இந்திய அணியுடன் மோதியது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்திருந்த இந்திய அணி, 2 வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்குள் சுருண்டது.

 ஃபாலோ ஆன் பெற்று 2 - வது இன்னிங்சை தொடர்ந்த அந்த அணி 103 ரன்களுக்கு சுருண்டது. எனவே, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 நாட்கள் நடைபெற திட்டமிட்ட டெஸ்ட் போட்டி 2 - வது நாளிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்