ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எண்ணிவிட முடியாது, இந்திய அணிக்கு அனுபவம் கைக் கொடுக்கும் - தினேஷ் கார்த்திக்

ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எண்ணிவிட முடியாது, இந்திய அணிக்கு அனுபவம் கைக் கொடுக்கும் - தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து
ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எண்ணிவிட முடியாது, இந்திய அணிக்கு அனுபவம் கைக் கொடுக்கும் - தினேஷ் கார்த்திக்
x
ஆப்கானிஸ்தான் அணியை சாதாரணமாக எண்ணிவிட முடியாது என இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆப்கான் அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை வரும் 14ஆம் தேதி இந்தியாவுடன் மோத உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் பெங்களூருவில் முகாமிட்டு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின் இடையே  செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தானில் திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். எனினும் ஆப்கானிஸ்தான் வீரர்களை விட இந்திய வீரர்களுக்கு அனுபவம் அதிகம் என்பதால், அது இந்திய அணிக்கு கைக்கொடுக்கும் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்