உலகக் கோப்பை கால்பந்து தொடர் : பட்டம் வெல்ல 32 அணிகளுக்கு இடையே போட்டி

உலகக் கோப்பை கால்பந்து தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கும் நிலையில், அது குறித்து சிறப்பு தொகுப்பு
உலகக் கோப்பை கால்பந்து தொடர் : பட்டம் வெல்ல 32 அணிகளுக்கு இடையே போட்டி
x
அதிக மக்களால் பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 32 அணிகள் எட்டு பிரிவுகளாக மோதும் இந்த தொடர் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரஷ்யாவில் 11 நகரங்களில் கால்பந்து போட்டிகளில் நடைபெறுகிறது.

ரவுண்ட் ராபின் முறைப்படி முதலில் லீக் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 அணிகள் பிடிக்கும் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும். அந்த சுற்றுகள் நாக் அவுட் முறைப்படி நடைபெறும். 

நடப்பு சாம்பியனான ஜெர்மனி F பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

பலம் வாய்ந்த போர்ச்சுகல், ஸ்பெயின் இடம்பெற்றுள்ள பி பிரிவு மிகவும் அபாயகரமான பிரிவாக கருதப்படுகிறது. 

உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டின அணி உள்ளது.

5 முறை சாம்பியனான பிரேசில் அணி, கடந் முறை ஜெர்மனியிடம் படுதோல்வியை தழுவியது. இம்முறை இளம் நட்சத்திர வீரர் நெமார் பிரேசில் அணிக்கு கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4 முறை உலக சாம்பியனான இத்தாலி, நெதர்லாந்து போன்ற அணிகள் உலகக் கோப்பை தொடருக்கே தகுதி பெறாதது கால்பந்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக ஐஸ்லாந்து, பனாமா அணிகள் களமிறங்குகிறது

இம்முறை உலகக் கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியனான ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்