"ஆணி வேரை அகற்ற வேண்டும்" - ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை

x

தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், நேர்மையான காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். போதைப்பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த, காவல்துறை அதன் ஆணிவேரை களைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிகாரிகளே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளி வந்துள்ள நிலையில் அதனை தடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு எனவும் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்றும் ஈபிஎஸ் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்