கட்டளையிட்ட அமைச்சர்.. வேட்டியை மடிச்சு கட்டிக் கொண்டு தாவி குதித்த எம்.எல்.ஏ

அமைச்சர் நேருவின் அன்பு கட்டளையை ஏற்று கொள்ளிடம் பாலத்தில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ தாவி குதித்து ஏறியது சிரிப்பு அலையை ஏற்படுத்தியது...
x

அமைச்சர் நேருவின் அன்பு கட்டளையை ஏற்று கொள்ளிடம் பாலத்தில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ தாவி குதித்து ஏறியது சிரிப்பு அலையை ஏற்படுத்தியது. திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பாலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி தாமதமாக வர, அப்போது மதகின் மீது ஏறி ஆய்வு செய்துகொண்டிருந்த அமைச்சர் நேரு, எம்எல்ஏ பழனியாண்டிக்கு நீங்களும் மேலே வாருங்கள் என அன்பு கட்டளையிட்டார். இதனையடுத்து எம்எல்ஏ பழனியாண்டி, வேட்டியை மடித்துக்கொண்டு மதகு கட்டையில் ஏறினார். இது அங்கிருந்தவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்