திமுக மூத்த தலைவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு காலமானார்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 2020-ஆம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் கடந்த ஒரு மாதமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story