மக்களவையில் கேள்வி எழுப்ப பணம்.? - திரிணாமுல் எம்.பி. நேரில் ஆஜர்

x

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இன்று ஆஜரானார். தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுாவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் மக்களவை நெறிமுறைகள் குழு, இன்றைய தினம் மொய்த்ரா கண்டிப்பாக ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதன்படி மொய்த்ரா ஆஜரானார். முன்னதாக, தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள், நவம்பர் 4ம் தேதி முடிந்தவுடன் ஆஜராவதாக மொய்த்ரா கூறிய நிலையில், அதனை ஏற்க மக்களவை நெறிமுறைக்குழு மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்