காங்கிரஸ் எடுத்த முக்கிய முடிவு
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வரும் 9ம் தேதி, காலை 10 மணி அளவில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மக்களவைத் தேர்தல், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான சி.பி.ஐ. அமலாக்கத்துறை நடவடிக்கைகள், சாதி வாரி கணக்கெடுப்பு, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story