"ஆதாரம் இருக்கா..?" - அண்ணாமலைக்கு வந்து விழுந்த சவால்
அமைச்சர் உதயநிதியை புகழ்ந்து சட்டமன்றத்தில் பேசியிருந்தால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் நிரூபிக்கலாம் என,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஒரு கட்சியின் தலைவர் ஆதாரமில்லாமல் பேசுவது அழகல்ல என்றும், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விவாதிக்க நான் தயார் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் உதயநிதியை சட்டமன்றத்தில் ஈஸ்வரன் துதி பாடியதாக, அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story