Variety காட்டிய ஈபிஎஸ்.. திகட்ட திகட்ட சாப்பிட்ட தொண்டர்கள்

x

சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு காலை, மதியம் என இருவேளையும் பல வகை உணவு பரிமாறப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு பரிமாறப்பட்டது. இதற்காக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கேட்டரிங் சார்பில், சுமார் 5 ஆயிரம் பேருக்கு தடபுடலாக உணவு தயாரிக்கப்பட்டது. காலை சிற்றுண்டியாக கேசரி, வடை, இட்லி, பொங்கல், சாம்பார், தேங்காய் சட்னி, காபி, டீ, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. பிற்பகலில் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்ப்ரூட் அல்வா, வெஜ் பிரியாணி, சாம்பார், மோர்குழம்பு, பாயாசம், ஐஸ்கிரீம் என பல வகை உணவு பரிமாறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்