ஈ.பி.எஸ். வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | EPS
அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உடனடியாக தேவைப்படும் மருந்துப் பொருட்களை வழங்க வேண்டுமென தி.மு.க. அரசை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு, உள்ளூர் கொள்முதல் மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக, தகவல்கள் தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை-எளிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவக்கல்வி இயக்குநர் பணியிடம் காலியாகவே இருப்பது, அரசு மருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப் பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகள், மருத்துவ பணியாளர்கள், கட்டுப்பாட்டு அறை முழுமையாக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.