"இதை உடனே செய்யுங்கள்" - ஈ.பி.எஸ். வெளியிட்ட முக்கிய அறிக்கை | Edappadi Palanisamy
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணத்துடன் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீட்டையும் பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், மழை வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரை மின் மோட்டார்கள் வைத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Next Story