"3 ஆண்டுகளில் 1 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரோ, கூகுள் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும், இதற்கு கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே காரணம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்க பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை வழங்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்