டெல்லி பறக்கும் ஓபிஎஸ்... PM மோடியுடன் மீட்டிங் - ஈபிஎஸ்-க்கு புது செக்..!

x

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த,

ஓ.பன்னீர்செல்வம் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேசியக் கட்சிகள் மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையையை தொடங்கியுள்ளன. திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக தனியாக நிற்கப்போவதாக அறிவித்து, பாஜகவுடன் கூட்டணி இல்லையென அறிவித்துவிட்டது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, டெல்லி சென்று, பாஜக மூத்த தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளதாகவும், அப்போது, பிரதமர் மோடியும் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்