முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு - 5 பேருக்கு கிடைத்த கௌரவம்
மது விலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மது விலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் பெ.சின்னகாமணன், கி.மகா மார்க்ஸ், திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் க.கார்த்திக், சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் கா.சிவா, ப.பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு அடுத்த ஜனவரி மாதம் 26ம் தேதி விருதுடன், தலா 40 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story