குடும்பத்துடன் திருப்பதி விரைந்த சந்திரபாபு நாயுடு - வெளியான காரணம்

x

சர்வதேச அளவில் இந்தியா நம்பர் ஒன் ஆக ஏற்றம் பெற வேண்டுமென, ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு ​தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மனைவி புவனேஷ்வரியுடன் சுவாமி தரிசனம் செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஏழுமலையானை வழிபட்டுள்ள நிலையில், மற்ற வழக்கமான பணிகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்