அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள்..தி.மு.க. இளைஞரணி சார்பில் செய்த நெகிழ்ச்சி சம்பவம்-நீ சிங்கம் தான்

x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில், தி.மு.க சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், கண் அறுவை சிகிச்சை முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மருத்துவ முகாம் மூலம் 146 பேர் ரத்த தானம் செய்ய உள்ளதாகவும், 46 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்