அதிமுக பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்ட விவகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டதை எதிர்த்த மனுகள் ஆய்வில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது...
x

அதிமுக பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்ட விவகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டதை எதிர்த்த மனுகள் ஆய்வில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சில தகவல்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கலைத்ததற்கு எந்த அதிகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கலைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.சி.பழனிச்சாமி, புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த மனுவின் நிலை என்ன என்பது குறித்த கேள்விக்கு, அது குறித்த மனு ஆய்வில் உள்ளதாக தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்