வெளியான அதிமுகவின் வரவு செலவு கணக்கு
மதுரை மாநாட்டில் சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக, அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. வங்கியில் அதிமுகவின் நிலை வைப்புத் தொகையாக 164.70 கோடியும், வளர்ச்சி நிதியாக 77.10 கோடியும் என மொத்தம் 261.80 கோடி வைப்பு நிதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் 20 கோடி பெறப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டுக்கு 2 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், 2 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Next Story