அதிமுக 52-ஆம் ஆண்டு தொடக்க விழா - ஈபிஎஸ் அதிரடி
திமுகவின் 52 ஆம் ஆண்டின் தொடக்க விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளார்.
அதிமுக 52 வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, கட்சிக்கொடி ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கட்சி கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளார். தொடர்ந்து, மதுரை மாநாட்டிற்கு வந்த போது விபத்தில் உயிரிழந்தோர் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு நிதி வழங்க உள்ளார். பின்னர், நாடாளுமன்ற தேர்தலுக்காக சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்படவுள்ள பூத் கமிட்டி பார்வையாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.