"3% விவாகரத்துக்கு போக்குவரத்து காரணம்" -முன்னாள் முதலமைச்சரின் மனைவி பேச்சால் சர்ச்சை
மும்பையில் 3சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக தேவேந்திர பட்னாவிஸின் மனைவி தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் 3சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக தேவேந்திர பட்னாவிஸின் மனைவி தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸின் மனைவின் அம்ருதா பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, மும்பையில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறினார். இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் போவதாக தெரிவித்த அம்ருதா, 3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுவதாக தெரிவித்த அவர் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி, அம்ருதா பட்னாவிஸின் பேச்சு வியக்க வைக்கிறது என தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலுக்கு விவாகரத்தை காரணமாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
Next Story